Tuesday, April 25, 2006

இசைஞானியின் 'ஒன் மேன் ஷோ'















ஆயிரம் ஆயிரம் ஆன்டுகளின் தமிழ் மற்றும் உலக இசை வரலாற்றின் உச்சமாய் எங்கள் தேவதூதன் அவதரித்தான்...

இனி
இசை என்றால் இளையராஜா...
இளையராஜா என்றால் இசை...
என
'அன்னக்கிளி' எங்களை தேடி வந்தது
அது முதல்
இதோ போதையேற்றும் 'மது'வாய்
காற்றில் உலவிடும் 'பச்சைகுதிரை'யாய்
எங்கள் இதயம் வருடும் 'ரசதந்திரம்'
செய்து கொண்டே இருக்கிறாய்...

உன்னை காண தவம் கிடந்த
எம் போன்ற பக்தர்களுக்கு
சென்ற ஆன்டு வரம் தந்தாய்
பாடி புகழ்ந்திருந்தோம் நாங்கள்...
அது போதாது என்றோர்க்கு
'கடவுள்' நீயே நேரில் வந்து பாடி நின்றாய்
வாழ்வின் மோட்சம் பெற்றோம்...
நன்றி என ஒற்றை சொல்லில்
முடிந்திடாது நம் கணக்கு
அடிக்கடி வந்து அமுதூட்டு செம்மலே...
காத்திருப்போம் நாங்கள்
முன்னதாக...
நுழைவுச்சீட்டு பெற்ற நாள் முதற்கொண்டே தவித்து கொன்டிருந்தது மனது. என்ன என்ன பாடல்கள் இடம் பெறும் என்பதை கற்பனை செய்வதிலும்...இவை இவை இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என விவாதித்து கொன்டிருந்தோம் நன்பர்கள். நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த பாடல்களில் 16 இடம் பெற்றதில் மகிழ்ச்சி என்றாலும் இன்னும் சிறப்பாக பாடல்களை தேர்வு செய்திருக்கலாமோ என ஏக்கத்தோடே நிகழ்ச்சி சட்டென்று முடிவுற்றது. பின்னர் விசாரித்ததில் சென்னை மா நகர காவல் துறையினர் கேட்டு கொண்டதர்க்கு இணங்கவே நிகழ்ச்சியை 11 மணிக்கு சட்டென்று முடித்து கொண்டார்கள் என அறிந்து கொன்டோம்...
நிகழ்ச்சியை துவக்கத்திலிருந்தே காண வேண்டும் என்ற ஆர்வத்திலும் சிறந்த இடத்தை தேர்வு செய்து அமர வேண்டும் என்ற ஆவலிலும் மாலை 5 மணிக்கே அரங்கத்தில் இருந்தோம் நானும் நன்பர் கூட்டமும். ஆனாலும் நாங்கள் செல்லும் முன்பே அரங்கம் 25% நிறைந்திருந்தது. 'ராஜா'வின் ஈர்ப்பு சக்தியின் மகிமை இது :)
மாலை 5 மனிக்கும் சென்னை வெயில் சுள்ளென்று அடித்து கொன்டிருந்தது.பொறுமையாய் காத்திருந்தோம் அருகிருந்த சக ராஜா ரசிகர்களோடு உரையாடி கொன்டு. பொறுமை இழந்த சிலர் ஆதங்கத்தை வெளிபடுத்தியபோது இருள் கவிந்த பின்பே நிகழ்ச்சி துவங்கும் என அசுவாசபடுத்தினோம்.எங்கள் பொறுமையய் சோதிக்கும் விதமாய் 'லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை குழு' வேறு 'பூமாலையே தோள் சேரவா' பாடலின் வயலின் கோர்வைஇசையை 4 அல்லது 5 முறை வாசித்து காண்பித்தார்கள். சென்னை வெயில் எல்லோர் பொறுமையயும் சோதித்த பின் ஒரு வழியாய் 7 மணிக்கு இருள் கவிந்தது.














பின்...பவதாரனியின் குரலில்
'எனக்கொரு அன்னை
வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பா...'
பாடலோடு நிகழ்ச்சி துவங்கியது. அதன் பின் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் 'காமாட்சி கருனா விலாசினி' மற்றும் 'பூவார் சென்னி மன்னன்' பாடல்கள் தொடர்தன. குறிப்பாக 'பூவார் சென்னி மன்னன்' பாடியவர் ராஜாவின் குரலை நகல் எடுத்தது போல் பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி சென்றார்.பின் 'அபஸ்வரம் ராம்ஜி' வந்து இன்னும் மூன்று நிமிடங்களில் ராஜா உங்கள் முன் தோன்றுவார் என கூறியதும் அதன்பின் சில சிறுவர்கள் வந்து அந்த மூன்று நிமிடங்களில் சில சமஸ்க்ரித சுலோகங்களை ஒப்புவித்தார்ககள்...
இவ்வளவு முன் தயாரிப்புகளும் கால தாமத படுத்தலும் எங்கள் 'அரசனை'... அல்ல 'கடவுளை' சிறந்த முறையில் எங்கள் முன் தோற்றுவிக்கதான் என அறிந்தபோது மனம் பரவசத்தில் தவிக்கிறது. வார்த்தைக்கள் அற்று கன்ணீர் பெருக்கெடுக்க 'பக்தர்'கள் ஆர்பரித்தார்கள் 'ராஜா' வாண வேடிக்கைகள் ஊடே தோன்றியதும்.

சற்றேரத்தாழ 5 நிமிடங்கள் தொடர்ந்தன பட்டாசுகளின் வான ஊர்வலம். 'இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு செய்ய வேண்டியது' என்ற 'ராஜா'வின் சிறு முனகலுக்கு பின் அவரே முதல் பாடலாக 'ஜனனி ஜனனி' யை தொடர்ந்தார்...
பாடலை தொடர்ந்து நிகழ்ச்சியின் பின்புலத்தை பற்றியும்
'கவிஞர் பொன்னடியாரின்' இடையறாத தமிழ் சேவை பற்றியும், அவரின் பாசறையில் பயின்ற கவிஞர்களை பற்றியும் சிறிது நேரம் உரையாடி விட்டு தமிழுக்கு வணக்கம் செலுத்தும் விதமாய் பவதாரினியோடு இனைந்து 'அமுதே தமிழே அழகிய...' என்ற பாடலை பாடினார்.
பின்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் 'ராம்ஜி' ராஜாவிடம் நீங்கள் முதல் முதலில் இசை அமைத்த பாடல் எது என்று கேள்வி எழுப்ப 'ராஜா' 'பாவலரோடு' இனைந்து பொதுவுடமை மேடைகளில் பாடி திரிந்ததையும் அப்பொழுது ஓர் முறை 'நேரு'வின் மறைவினால் நிகழ்ச்சிகள் நடத்த இயலாமல் போனதால் 'நேரு'வின் மறைவை ஒட்டி கவிஞர் 'கன்ணதாசன்' எழுதிய இரங்கர்ப்பா தினதந்தியில் ப்ரசுரம் ஆகி இருந்ததை தான் மெட்டமைத்தயும் அதை கேட்டு எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு அவைகளை 'நேரு'வின் மறைவை ஒட்டிய இரங்கல் கூட்டமாய் 'பாவலர'் மாற்றி அமைத்து ராஜாவையே இப்பாடலை பாட வைத்ததயும் நினைவு கூர்ந்தார். பின்பு அப்பாடலை முழுதும் பாடி காட்டினார். ராஜா தன் வசிகர குரலில் பாடிய இப்பாடல் உள்ளம் உருக்குவதாய் இருந்தது...மேலும் இதுவரை கேட்காத ஒரு பாடலை கேட்ட நிறைவை தந்தது அது.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க வரிசையாய் தன் காந்த குரலில் 'இதயம் ஒரு கோயில்' 'அடி ஆத்தாடி' 'சொர்க்கமே என்றாலும்' போன்ற பாடல்களை தொடர்ந்து பாடினார். தற்கால சமூக சூழலை விளக்கும் விதமாய் 'சொர்க்கமே என்றாலும்' பாடலை மாற்றி பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி குவித்தார்*.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க வரிசையாய் தன் காந்த குரலில் 'இதயம் ஒரு கோயில்' 'அடி ஆத்தாடி' 'சொர்க்கமே என்றாலும்' போன்ற பாடல்களை தொடர்ந்து பாடினார். தற்கால சமூக சூழலை விளக்கும் விதமாய் 'சொர்க்கமே என்றாலும்' பாடலை மாற்றி பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி குவித்தார்*.
அதன் பிறகு திரும்பவும் 'ராம்ஜி' 'ராஜா'விடம் சில கேள்விகள் எழுப்பினார். எப்படி ஒரு இயக்குனர் காட்சிகளை விவரிப்பார் எனவும் அதை எப்படி உள்வாங்கி இசை அமைப்பது எனவும்...பதில் அளிக்கையில் ராஜா S.D. Burmanஐ குறிப்பிட்டு சில செய்திகள் கூற துவங்கினார். அவருக்கு situation சொல்வது கடினம் என்றும் எல்லா வகையான விவரங்களும் அவர் கேட்பார் எனக்கூறி...தான் கேள்விபட்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஓரு திரைபடத்தில் நாயகன் நாயகி இடையே அன்னியோன்மயான காட்சி என இயக்குனர் விவரிக்கையில்... நாயகி என்ன உடை உடுத்தி கொன்டிருப்பார்...என்ன வகையான ஆபரணங்கள் அனிந்திருப்பார்...பொட்டு வைத்திருப்பாரா...புடவை என்றால் அது சரிகை கலந்ததா..என பலவும் கேட்டு தெரிந்த கொன்ட பின் தான் இசை அமைத்தார் எனவும்...கூறினார். பின்பு 'சாதனா சர்கம்'ஐ அழைத்து அப்பாடலை பாடி காண்பிக்க சொன்னார். அந்த பாடல் 'ராதா நெ நாம் ஜபி' என அவர் பாடி கான்பித்தார்... அதன் பின் தொடர்ந்து அவர் 'இந்த மான் எந்தன் சொந்த மான்' 'ராஜா ராஜாதி ராஜன்' 'காதல் ஒவியம்' 'தென்பான்டி சீமையிலே' நான் தேடும் செவ்வந்தி' 'எனை தாலாட்ட' போன்ற பாடல்களை பாடினார். 'ராஜா ராஜாதி' பாடலின் போது ரசிகர்களின் ஆரவாரமும் சேர்ந்து கலை கட்டியது கூத்து. நான் தேடும்' பாடல் முடிந்தவுடன் வழக்கம் போல் 'once more' கேட்க செல்லமாய் கோபித்து கொண்ட ராஜா 'ஜெயா டி.வி.' நிகழ்ச்சிலதான்
'once more' ெ கேட்டிங்க இல்ல இப்பவும் வேனுமா என வினவ ரசிகர்கள் தொடர்ந்து கேட்க மீன்டும் பாடினார்...இதன் பின்னால் அதிசயமாய் அவர் 'இளமை எனும் பூங்காற்று' பாடலை பாடினார். பாடி முடித்ததும் சொல்லியும் விட்டார் இதை SPB அருமையாக பாடி இருப்பார் எனவும் ஆயினும் அவருக்கு மெட்டமைத்து சொல்லி கொடுத்ததினால் தன்னை மன்னித்து விடும் படி கேட்டு கொன்டார்.
இப்பாடல் முடிந்த பின் 'ராம்ஜி' மேலும் சில கேள்விகள் கேட்க அதற்க்கு உற்சாகம் ஆன 'ராஜா' MSV பற்றியும் கன்ணதாசன் பற்றியும் பல செய்திகள் கூற துவங்கினார். எப்படி கன்ணதாசன் போகிற போக்கில் பாடல் எழுதி தருவார் என்றும் 'தேன் சிந்துதே வாணம்' பாடலை எப்படி அனாயாசமாய் எழுதி தந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
அதன் பின் 'அந்த நிலாவத்தான்' பாடல் பாடினார். பாடலின் போது 'மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு' என்ற வரிக்கு பதில் வரியாக 'கோயில்லுக்கு போயி வந்ததால் குங்குமத்தோடு மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு' என பாடி மற்றும் அடுத்த வரிக்கு பதிலாக 'ஏதுடா வம்பா போச்சு எதுவுமே புரியலையே' எனவும் பாடி ரசிகர்களின் கரவொலியை அள்ளி குவித்தார்.அதை தொடர்ந்து 'மான்குயிலே பூன்குயிலே' பாடலை பாடினார். பாடலை தொடர்ந்து 'ராம்ஜி' இந்த பாடலுக்கு இந்த மெட்டுத்தான் சரியா அல்ல வேறு வகையிலும் மெட்டமைக்கலாமா என கேட்க...பாடலின் 'original'ஆன 'எறுமயில் ஏறி வரும்' பாடலை பாடி பின்பு 'மான்குயிலே பூன்குயிலே' பாடலை 4 5 விதமாய் பாடி கான்பித்தார். 'ராம்ஜி' அடுத்தாக 'சரி உங்க வீட்ல நுழையும் போது தெரியாம யுவன் 'room்'க்குள்ள போயிர்றேன் வச்சுபோம் அவர் எப்படி மெட்டமைச்சிருப்பார் என கேட்க அதற்க்கு ராஜா அடிதொன்டையிலிருந்து 'மான்குயிலேஏ பூண்குயிலேஏ சேஏதி ஓன்ன கேளு ஓன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு நாளு நாளு...' என பாடவும் கரவொலி வின்னை பிளந்தது.
அதன் பின் மேடை ஏறிய கவிஞர் 'முத்துலிங்கம்' ராஜாவிடம் 'முத்தை தரு அத்தி திரு நகை' பாடலை மாற்றி மெட்டமைக்க வேன்டி கொண்டார். மறுத்து பேசிய 'ராஜா'விடம் "உங்க கோபம் எல்லாம் 'பிரசாத் ஸ்டுடியோ' வோட அவ்வளவுதான் இங்க கோவிக்க முடியாது! கோவம் வந்தாலும் அடக்கிடுவீங்க...ஏன்னா நெறைய மக்கள் இருக்காங்க" என கூறி பணிய வைத்தார். அதற்க்கு பதில் அளித்த 'ராஜா' "னான் பன்ன பாட்டுன்னா பரவாயில்லை மேலும் இது ஒரு சந்தத்தில் அமைஞ்ச பாட்டு. இது மாதிரி Mஸ்V ஒரே சந்தத்தில் அமைந்த எவ்வளவோ பாட்டு போட்டு இருக்கார்" என்று கூறீ 'மாம்பழத்து வன்டு' 'வீடு வரை உறவு' 'பேசுவது கிளியா' போன்ற பாடல்களை பாடி காண்பித்தார்...ஆனால் மற்றவரின் பாடல்களை மாற்றுவது முறை அல்ல என கூறினார் ஆனால் 'முத்துலிங்கம்' மேலும் வற்புறுத்தவே ஒரு நிமிடம் என கூறியவர் 'முத்தை தரு அத்தி திரு நகை' பாடலை முற்றிலும் புதுமையான இனிமையான மெட்டில் பாடி மேலும் இரண்டு மூன்று வகையிலும் பாடி காண்பித்தார்.


1 Comments:

Blogger Krishnah said...

wonderfullllllll blog.. apdiye show va nerla paatha madhiri feeling. raj TV la kuduttha coverage vida nalla irukku.. good job..

11:10 AM  

Post a Comment

<< Home