Saturday, November 04, 2006

Tuesday, July 04, 2006

Reservation FAQs: A touching poem by Vara Vara Rao

Friday, April 28, 2006

இட ஒதுகீடும் மேல் சாதியினர் கலகமும்

மூவாயிரம் ஆண்டுகளாய் இட ஒதுக்கிடு வைத்தே வயிரு வளர்த்த பன்றிகள் கூட்டம் இன்று இடஒதுக்கிட்டிற்க்கு எதிராக தெருவில் இறங்கி கலகம் செய்கின்றன...இது வரலாற்று முரன் போல் தோன்றினாலும், வரலாற்றை மாற்றியும் திரித்தும் 'என் சான் உடம்புக்கு சுய நலமே பிரதானம்' என்று வாழ்ந்து வந்த இவைகளுக்கு இது முரன் அல்ல.
'ABANDON CASTE RESPECT MERIT' --எனும் இவர்கள் கோஷம் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய போதும் சம்புகனை கொன்ற போதும் எங்கு ஒளிந்திருந்தது? " 'பார்ப்பனர்' மட்டுமே கோயிலில் அர்ச்சனை செய்ய தகுதிஉடையவர்கள் ஏனைய சாதியினர் சமஸ்க்ரிதம் பயின்று வேத விற்ப்பன்னர் ஆனாலும் ஆகம விதிகளின்படி அவர்கள் கடவுளை தொடுவது மற்றும் அர்ச்சிப்பது முறையல்ல" என 1972ல் உச்ச நீதிமன்றம் பெரியார் தொடுத்த "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்ற வழக்கில் தீர்ப்பு அளித்த பொது பூனூல் கொன்டு முதுகு சொரிந்து கொன்டிருந்ததா?
இட ஒதுக்கீடு என்ன பெரியாரும், அம்பேத்கரும் கண்டுபிடித்த அமைப்பா? அல்லது அது இங்கு முன்னமையே செயல்பட்டு கொன்டிருந்ததா? சாதி சான்றிதழ் இருப்பதால் ஒவ்வொருவனும் தன் சாதியை பற்றி தன்னுனர்வு கொள்கிறான் என்வே இட ஒதுக்கீடு மற்றும் சாதி சான்றிதழை ஒழித்து விட்டால் சமூகச்சமத்துவம் மலர்ந்து விடும் என்போருக்கு-ஆயிர கணக்கான ஆண்டுகள் எந்த சான்றிதழை வைத்து சாதியை கட்டி காத்தது சமூகம் என்பதற்க்கு விடை தேடட்டும். அம்பேத்கர் மிக சரியாகவே விடை கண்டார்- "சாதிகள் அழியாமல் ஓங்கி வளர்வதர்க்கான காரனம் அகமண முறை மட்டுமே" என்று. இப்போராட்டத்தில் கலந்து கொள்வோர் "அகமண முறை புரிந்து சாதியை தக்க வைத்து கொள்ள மாட்டோம்" என உறுதிமொழி எடுக்க தயாரா! நாளிதழ்களின் மணமக்கள் தேவை விளம்பரங்களில் சாதி, உட்சாதி, அதன் உட்பிரிவு என அனைத்தும் குறிப்பிட்டு துனை தேடும்...பிள்ளைகள் பிறந்து சமூகம் தழைக்க, விந்து பெருக்க வல்லமையுல்ல ஓர் ஆன்குறியும் அதை உள்வாங்கி கர்ப்பம் தரிக்க ஓர் பெண்குறியும் போதும் என்பதை அறியாமல் ஜாதக புத்தகங்களில் யோனி பொருத்தம் பார்க்கும் மூடர்களா நம்மிடம் தகுதியும் திறமையயும் பற்றி பேசுவது?
நிற்க! பிரதான விஷயத்திற்க்கு செல்வோம்...
இட ஒதுக்கீடு என்பது நீங்கள் எங்களுக்கு இடும் பிச்சையல்ல அது எங்களது உரிமை. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கபட்டு, இழிவாய் நடத்தப்பட்டு, சந்ததி சந்ததியாய் அறிவு மழுங்கடிக்கப்பட்ட ஓர் சமூகம் தங்கள் சுயத்தை தங்கள் சமூகத்தை வளர்த்து கொள்வதர்க்காண ஓர் வாய்ப்பு. ஆம் உங்களோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு கல்வி சார்ந்த பனிகளில் ஆற்றலும் திறமையும் குறைவுதான் ஆனால் அது எங்களது வஞ்சிக்கபட்ட மற்றும் ஒடுக்கபட்ட நிலைகளில் இருந்து முகிழ்த்தது. அதற்க்கும் சேர்த்து பொறுப்பேற்க்கவேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீர்கள். ஆயினும் +2விலோ பொறியியல்/மருத்துவ பட்டப்படிப்பிலோ தேறாத ஒருவரை நாங்கள் அங்கிகரிக்க சொல்லவில்லை. எல்லோரும் தேறுவதர்க்கான குறைந்தப்பட்ச மதிபென்கள் நிர்னயிக்கபட்டுள்ளன. அத்தேர்ச்சியின்படிதான் எல்லோரும் பொறியாளராகவோ, மருத்துவராகவோ பட்டம் பெறவும் பனியாற்றவும் முடியும். இதில் எங்கு தகுதியின்மையும் திறமையின்மையும் கண்டீர்கள். எவ்வளவு மதிப்பென் பெற்றாலும் தேர்ச்சியடைந்து வெளியில் வந்த பின் இருவரும் சமமே!
ஒரே வித்தியாசம் நீங்கள் அதிக மதிப்பென் பெற்று அமெரிக்கா பறந்து விடுவீர்கள் நாங்கள் குறைந்த மதிப்பென் பெற்றதால் இங்கு எங்கள் மக்களுக்கு சேவை செய்வோம்.சரி இந்த பிள்ளைகள் 'capitation fee' முறைக்கெதிராக ஏன் கிளர்ந்து எழவில்லை? அந்த முறையில் தகுதியும் திறமையும் பாதுகாக்கபடுகிறதா? அல்லது அவர்க்கள் வர்க்க நலன் பாதுகாக்கபடுகிறதா? IITயில் படிக்கும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியினை கொடுக்க எவ்வளவு வரிச்சலுகைகள் கொடுக்க படுகின்றன தெரியுமா? அவை அனைத்தும் எல்லா சாதியினரிடம் இருந்தும் பெறப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை கொன்டே கொடுக்கபடுகின்றன.எங்கள் பனத்தில் ஊறித்திளைத்து, உறிஞ்சி குடித்துவிட்டு அமெரிக்கா செல்லும் 'பார்ப்பன பிள்ளைகள்' இன்தியாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் 90 விழுக்காடு!
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு கலகம் செய்கின்றன அக்கிரகாரத்து குஞ்சுகள்்! நேரடியாய் பதில் கலகம் செய்ய கடமைபட்டுள்ளொம் நாம். அவர்கள் தெருவில் இறங்கி விட்டார்கள்... தெருவே வாழ்க்கையாய் விதிக்கபட்டு வாழும் நம் வர்க்கம் இனியும் அமைதி காப்பதா? பெரியாரும், அம்பேத்கரும் தொடங்கி வைத்த போரின் இறுதி கட்டம் இது. சுரனையற்ற ஜென்மங்களே விழியுங்கள். . .

கற்பி! ஒன்று சேர்! கலகம் செய்!

Wednesday, April 26, 2006

அரட்டைஅரங்கம் கண்ட வள்ளல் அன்னன் விசு வாழ்க!

தமிழக தேர்தல்-2006 இன்னும் என்ன என்ன படை தாவல்களை சந்திக்க போகிறதோ தெரியவில்லை ஆயினும் அ.தி.மு.க.வில் சமிபத்திய நட்சத்திர இனைப்பான 'விசு' மீது நாம் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.

80'களில் புழுத்து போன கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை comedy காட்சிகள் மற்றும் sentiment் சவடால்களோடு அரங்கேற்றி வெற்றி கண்ட 'விசு' 90'களில் அவ்வேலையை K.S்.ரவிகுமார் மற்றும் V.சேகர் எடுத்து கொண்டதும் SUN TVஇல் போய் அய்க்கியமானார்...அரட்டை அரங்கம் மூலமாக. இ ந் நிகழ்ச்சி தேனீர் கடை மற்றும் முடித்திருத்தகம் போன்ற இடங்களில் நடைபெறும் வெட்டி அரட்டைகளை ஒத்து இருந்தாலும் நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பை பயன்படுத்தி தன்னை ஒரு சமூக காவலராகவும் திக்கற்றோருக்கு திசை காட்டும் அபத்பாந்தனாகவும் உருவகபடுத்தி கொண்டார்.

துன்டை கையில் பிடித்து கொண்டு அவர் அரங்கத்தினோர் சொல்லும் கன்ணீர் கதைகளை கேட்டு அழுது கன்களை துடைத்து கொள்வதும்...மெய்யான சமூக பொறுப்போடு நியாயங்களை பேசும் சிலரை இடக்கரடக்கல் செய்து Off பன்னுவதுமாய் ஒர் தேர்ந்த நடிகராய் தன் அளுமையை வளர்த்து கொன்டு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று கொன்டார்.தமிழ், தமிழர், திராவிடம் மற்றும் தமிழர் வாழ்வுரிமை குறித்த பேச்சுகளை கவனமாக தவிர்த்து Indiaவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதிலும் முன்னிலைபடுத்துவதிலும் வெற்றி கன்டார்.

திரையில் வீர சவடால் அடிக்கும் விஜயகாந்தை போல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க அரைகூவுவதும், முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதும், மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிப்பதும், பொதுவுடமை இயக்கங்களின் செயல் பாடுகளை விமர்சிப்பதும் மற்றும் தான் கொன்டிருக்கும் சாதிய-சமூக விழுமியங்களை கட்டிகாப்பதும் ஆக முழுக்க முழுக்க ஒர் பார்ப்பன திரிபுவாதியாக மக்களை முட்டாள் ஆக்கி கொன்டிருந்தார். SUN TV குழுமம் இவை அனைத்தயும் அரவனைத்தே சென்றது. அவர்களுக்கு கட்சி வேறு கொள்கை வேறு...குடும்பம் மற்றும் சொத்து சேர்த்தல் அதை பாதுகாத்தல் தான் முக்கியம் மக்கள் நலம் எல்லாம் அடுத்த பட்சம். தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ள 'விசு' அவர்களுக்கோர் கருவி. தனது பாசிச கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்க்கு
SUN TV 'விசு'விற்க்கு ஒர் கருவி. இவ்விரு கருவிகளும் சேர்ந்து மக்களை மந்தைகளாக உருவாக்குவதில் பெறும் வெற்றி கன்டனர்.
ஆயிற்று சற்றேரதாழ 25 ஆண்டுகள் தமிழ் மன்னில் பசுவாய் உலா வந்தது இன்று தன் நிஜ முகத்தை காட்டுகிறது...பார்ப்பன பாசிசத்தின் மொத்த உருவமான 'ஜெயா'விடம் சரண் புகுந்ததின் மூலமாக. வேறு இயக்கங்கள் இல்லைய என அய்யபடுவோர்க்கு-BJP இங்கு செல்லாகாசு, RSS-VHP போன்றவை நேரடி அல்லது பெரும் மக்கள் இயக்கங்களாக உருவெடுக்கவில்லை. தேவர் சாதி ஆதிக்கமும் பார்ப்பன தலைமையும் ஒருங்கே அமைந்த...பார்ப்பன-பாசிச லட்சியங்களை மறைமுகமாக செயல் படுத்தி கொன்டிருக்கும் அ.தி.மு.க.வில் இனைத்து கொன்டு தன்னை சரியாகவே அடையாளம் காட்டி இருக்கிறார் 'விசு'. மக்கள் கவணம் கொள்வார்களா அல்லது வழக்கம் போலவே மந்தைகளாக இருப்பார்களா?!!

Tuesday, April 25, 2006

இசைஞானியின் 'ஒன் மேன் ஷோ'















ஆயிரம் ஆயிரம் ஆன்டுகளின் தமிழ் மற்றும் உலக இசை வரலாற்றின் உச்சமாய் எங்கள் தேவதூதன் அவதரித்தான்...

இனி
இசை என்றால் இளையராஜா...
இளையராஜா என்றால் இசை...
என
'அன்னக்கிளி' எங்களை தேடி வந்தது
அது முதல்
இதோ போதையேற்றும் 'மது'வாய்
காற்றில் உலவிடும் 'பச்சைகுதிரை'யாய்
எங்கள் இதயம் வருடும் 'ரசதந்திரம்'
செய்து கொண்டே இருக்கிறாய்...

உன்னை காண தவம் கிடந்த
எம் போன்ற பக்தர்களுக்கு
சென்ற ஆன்டு வரம் தந்தாய்
பாடி புகழ்ந்திருந்தோம் நாங்கள்...
அது போதாது என்றோர்க்கு
'கடவுள்' நீயே நேரில் வந்து பாடி நின்றாய்
வாழ்வின் மோட்சம் பெற்றோம்...
நன்றி என ஒற்றை சொல்லில்
முடிந்திடாது நம் கணக்கு
அடிக்கடி வந்து அமுதூட்டு செம்மலே...
காத்திருப்போம் நாங்கள்
முன்னதாக...
நுழைவுச்சீட்டு பெற்ற நாள் முதற்கொண்டே தவித்து கொன்டிருந்தது மனது. என்ன என்ன பாடல்கள் இடம் பெறும் என்பதை கற்பனை செய்வதிலும்...இவை இவை இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என விவாதித்து கொன்டிருந்தோம் நன்பர்கள். நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த பாடல்களில் 16 இடம் பெற்றதில் மகிழ்ச்சி என்றாலும் இன்னும் சிறப்பாக பாடல்களை தேர்வு செய்திருக்கலாமோ என ஏக்கத்தோடே நிகழ்ச்சி சட்டென்று முடிவுற்றது. பின்னர் விசாரித்ததில் சென்னை மா நகர காவல் துறையினர் கேட்டு கொண்டதர்க்கு இணங்கவே நிகழ்ச்சியை 11 மணிக்கு சட்டென்று முடித்து கொண்டார்கள் என அறிந்து கொன்டோம்...
நிகழ்ச்சியை துவக்கத்திலிருந்தே காண வேண்டும் என்ற ஆர்வத்திலும் சிறந்த இடத்தை தேர்வு செய்து அமர வேண்டும் என்ற ஆவலிலும் மாலை 5 மணிக்கே அரங்கத்தில் இருந்தோம் நானும் நன்பர் கூட்டமும். ஆனாலும் நாங்கள் செல்லும் முன்பே அரங்கம் 25% நிறைந்திருந்தது. 'ராஜா'வின் ஈர்ப்பு சக்தியின் மகிமை இது :)
மாலை 5 மனிக்கும் சென்னை வெயில் சுள்ளென்று அடித்து கொன்டிருந்தது.பொறுமையாய் காத்திருந்தோம் அருகிருந்த சக ராஜா ரசிகர்களோடு உரையாடி கொன்டு. பொறுமை இழந்த சிலர் ஆதங்கத்தை வெளிபடுத்தியபோது இருள் கவிந்த பின்பே நிகழ்ச்சி துவங்கும் என அசுவாசபடுத்தினோம்.எங்கள் பொறுமையய் சோதிக்கும் விதமாய் 'லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை குழு' வேறு 'பூமாலையே தோள் சேரவா' பாடலின் வயலின் கோர்வைஇசையை 4 அல்லது 5 முறை வாசித்து காண்பித்தார்கள். சென்னை வெயில் எல்லோர் பொறுமையயும் சோதித்த பின் ஒரு வழியாய் 7 மணிக்கு இருள் கவிந்தது.














பின்...பவதாரனியின் குரலில்
'எனக்கொரு அன்னை
வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பா...'
பாடலோடு நிகழ்ச்சி துவங்கியது. அதன் பின் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் 'காமாட்சி கருனா விலாசினி' மற்றும் 'பூவார் சென்னி மன்னன்' பாடல்கள் தொடர்தன. குறிப்பாக 'பூவார் சென்னி மன்னன்' பாடியவர் ராஜாவின் குரலை நகல் எடுத்தது போல் பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி சென்றார்.பின் 'அபஸ்வரம் ராம்ஜி' வந்து இன்னும் மூன்று நிமிடங்களில் ராஜா உங்கள் முன் தோன்றுவார் என கூறியதும் அதன்பின் சில சிறுவர்கள் வந்து அந்த மூன்று நிமிடங்களில் சில சமஸ்க்ரித சுலோகங்களை ஒப்புவித்தார்ககள்...
இவ்வளவு முன் தயாரிப்புகளும் கால தாமத படுத்தலும் எங்கள் 'அரசனை'... அல்ல 'கடவுளை' சிறந்த முறையில் எங்கள் முன் தோற்றுவிக்கதான் என அறிந்தபோது மனம் பரவசத்தில் தவிக்கிறது. வார்த்தைக்கள் அற்று கன்ணீர் பெருக்கெடுக்க 'பக்தர்'கள் ஆர்பரித்தார்கள் 'ராஜா' வாண வேடிக்கைகள் ஊடே தோன்றியதும்.

சற்றேரத்தாழ 5 நிமிடங்கள் தொடர்ந்தன பட்டாசுகளின் வான ஊர்வலம். 'இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு செய்ய வேண்டியது' என்ற 'ராஜா'வின் சிறு முனகலுக்கு பின் அவரே முதல் பாடலாக 'ஜனனி ஜனனி' யை தொடர்ந்தார்...
பாடலை தொடர்ந்து நிகழ்ச்சியின் பின்புலத்தை பற்றியும்
'கவிஞர் பொன்னடியாரின்' இடையறாத தமிழ் சேவை பற்றியும், அவரின் பாசறையில் பயின்ற கவிஞர்களை பற்றியும் சிறிது நேரம் உரையாடி விட்டு தமிழுக்கு வணக்கம் செலுத்தும் விதமாய் பவதாரினியோடு இனைந்து 'அமுதே தமிழே அழகிய...' என்ற பாடலை பாடினார்.
பின்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் 'ராம்ஜி' ராஜாவிடம் நீங்கள் முதல் முதலில் இசை அமைத்த பாடல் எது என்று கேள்வி எழுப்ப 'ராஜா' 'பாவலரோடு' இனைந்து பொதுவுடமை மேடைகளில் பாடி திரிந்ததையும் அப்பொழுது ஓர் முறை 'நேரு'வின் மறைவினால் நிகழ்ச்சிகள் நடத்த இயலாமல் போனதால் 'நேரு'வின் மறைவை ஒட்டி கவிஞர் 'கன்ணதாசன்' எழுதிய இரங்கர்ப்பா தினதந்தியில் ப்ரசுரம் ஆகி இருந்ததை தான் மெட்டமைத்தயும் அதை கேட்டு எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு அவைகளை 'நேரு'வின் மறைவை ஒட்டிய இரங்கல் கூட்டமாய் 'பாவலர'் மாற்றி அமைத்து ராஜாவையே இப்பாடலை பாட வைத்ததயும் நினைவு கூர்ந்தார். பின்பு அப்பாடலை முழுதும் பாடி காட்டினார். ராஜா தன் வசிகர குரலில் பாடிய இப்பாடல் உள்ளம் உருக்குவதாய் இருந்தது...மேலும் இதுவரை கேட்காத ஒரு பாடலை கேட்ட நிறைவை தந்தது அது.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க வரிசையாய் தன் காந்த குரலில் 'இதயம் ஒரு கோயில்' 'அடி ஆத்தாடி' 'சொர்க்கமே என்றாலும்' போன்ற பாடல்களை தொடர்ந்து பாடினார். தற்கால சமூக சூழலை விளக்கும் விதமாய் 'சொர்க்கமே என்றாலும்' பாடலை மாற்றி பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி குவித்தார்*.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க வரிசையாய் தன் காந்த குரலில் 'இதயம் ஒரு கோயில்' 'அடி ஆத்தாடி' 'சொர்க்கமே என்றாலும்' போன்ற பாடல்களை தொடர்ந்து பாடினார். தற்கால சமூக சூழலை விளக்கும் விதமாய் 'சொர்க்கமே என்றாலும்' பாடலை மாற்றி பாடி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளி குவித்தார்*.
அதன் பிறகு திரும்பவும் 'ராம்ஜி' 'ராஜா'விடம் சில கேள்விகள் எழுப்பினார். எப்படி ஒரு இயக்குனர் காட்சிகளை விவரிப்பார் எனவும் அதை எப்படி உள்வாங்கி இசை அமைப்பது எனவும்...பதில் அளிக்கையில் ராஜா S.D. Burmanஐ குறிப்பிட்டு சில செய்திகள் கூற துவங்கினார். அவருக்கு situation சொல்வது கடினம் என்றும் எல்லா வகையான விவரங்களும் அவர் கேட்பார் எனக்கூறி...தான் கேள்விபட்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஓரு திரைபடத்தில் நாயகன் நாயகி இடையே அன்னியோன்மயான காட்சி என இயக்குனர் விவரிக்கையில்... நாயகி என்ன உடை உடுத்தி கொன்டிருப்பார்...என்ன வகையான ஆபரணங்கள் அனிந்திருப்பார்...பொட்டு வைத்திருப்பாரா...புடவை என்றால் அது சரிகை கலந்ததா..என பலவும் கேட்டு தெரிந்த கொன்ட பின் தான் இசை அமைத்தார் எனவும்...கூறினார். பின்பு 'சாதனா சர்கம்'ஐ அழைத்து அப்பாடலை பாடி காண்பிக்க சொன்னார். அந்த பாடல் 'ராதா நெ நாம் ஜபி' என அவர் பாடி கான்பித்தார்... அதன் பின் தொடர்ந்து அவர் 'இந்த மான் எந்தன் சொந்த மான்' 'ராஜா ராஜாதி ராஜன்' 'காதல் ஒவியம்' 'தென்பான்டி சீமையிலே' நான் தேடும் செவ்வந்தி' 'எனை தாலாட்ட' போன்ற பாடல்களை பாடினார். 'ராஜா ராஜாதி' பாடலின் போது ரசிகர்களின் ஆரவாரமும் சேர்ந்து கலை கட்டியது கூத்து. நான் தேடும்' பாடல் முடிந்தவுடன் வழக்கம் போல் 'once more' கேட்க செல்லமாய் கோபித்து கொண்ட ராஜா 'ஜெயா டி.வி.' நிகழ்ச்சிலதான்
'once more' ெ கேட்டிங்க இல்ல இப்பவும் வேனுமா என வினவ ரசிகர்கள் தொடர்ந்து கேட்க மீன்டும் பாடினார்...இதன் பின்னால் அதிசயமாய் அவர் 'இளமை எனும் பூங்காற்று' பாடலை பாடினார். பாடி முடித்ததும் சொல்லியும் விட்டார் இதை SPB அருமையாக பாடி இருப்பார் எனவும் ஆயினும் அவருக்கு மெட்டமைத்து சொல்லி கொடுத்ததினால் தன்னை மன்னித்து விடும் படி கேட்டு கொன்டார்.
இப்பாடல் முடிந்த பின் 'ராம்ஜி' மேலும் சில கேள்விகள் கேட்க அதற்க்கு உற்சாகம் ஆன 'ராஜா' MSV பற்றியும் கன்ணதாசன் பற்றியும் பல செய்திகள் கூற துவங்கினார். எப்படி கன்ணதாசன் போகிற போக்கில் பாடல் எழுதி தருவார் என்றும் 'தேன் சிந்துதே வாணம்' பாடலை எப்படி அனாயாசமாய் எழுதி தந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
அதன் பின் 'அந்த நிலாவத்தான்' பாடல் பாடினார். பாடலின் போது 'மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு' என்ற வரிக்கு பதில் வரியாக 'கோயில்லுக்கு போயி வந்ததால் குங்குமத்தோடு மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு' என பாடி மற்றும் அடுத்த வரிக்கு பதிலாக 'ஏதுடா வம்பா போச்சு எதுவுமே புரியலையே' எனவும் பாடி ரசிகர்களின் கரவொலியை அள்ளி குவித்தார்.அதை தொடர்ந்து 'மான்குயிலே பூன்குயிலே' பாடலை பாடினார். பாடலை தொடர்ந்து 'ராம்ஜி' இந்த பாடலுக்கு இந்த மெட்டுத்தான் சரியா அல்ல வேறு வகையிலும் மெட்டமைக்கலாமா என கேட்க...பாடலின் 'original'ஆன 'எறுமயில் ஏறி வரும்' பாடலை பாடி பின்பு 'மான்குயிலே பூன்குயிலே' பாடலை 4 5 விதமாய் பாடி கான்பித்தார். 'ராம்ஜி' அடுத்தாக 'சரி உங்க வீட்ல நுழையும் போது தெரியாம யுவன் 'room்'க்குள்ள போயிர்றேன் வச்சுபோம் அவர் எப்படி மெட்டமைச்சிருப்பார் என கேட்க அதற்க்கு ராஜா அடிதொன்டையிலிருந்து 'மான்குயிலேஏ பூண்குயிலேஏ சேஏதி ஓன்ன கேளு ஓன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு நாளு நாளு...' என பாடவும் கரவொலி வின்னை பிளந்தது.
அதன் பின் மேடை ஏறிய கவிஞர் 'முத்துலிங்கம்' ராஜாவிடம் 'முத்தை தரு அத்தி திரு நகை' பாடலை மாற்றி மெட்டமைக்க வேன்டி கொண்டார். மறுத்து பேசிய 'ராஜா'விடம் "உங்க கோபம் எல்லாம் 'பிரசாத் ஸ்டுடியோ' வோட அவ்வளவுதான் இங்க கோவிக்க முடியாது! கோவம் வந்தாலும் அடக்கிடுவீங்க...ஏன்னா நெறைய மக்கள் இருக்காங்க" என கூறி பணிய வைத்தார். அதற்க்கு பதில் அளித்த 'ராஜா' "னான் பன்ன பாட்டுன்னா பரவாயில்லை மேலும் இது ஒரு சந்தத்தில் அமைஞ்ச பாட்டு. இது மாதிரி Mஸ்V ஒரே சந்தத்தில் அமைந்த எவ்வளவோ பாட்டு போட்டு இருக்கார்" என்று கூறீ 'மாம்பழத்து வன்டு' 'வீடு வரை உறவு' 'பேசுவது கிளியா' போன்ற பாடல்களை பாடி காண்பித்தார்...ஆனால் மற்றவரின் பாடல்களை மாற்றுவது முறை அல்ல என கூறினார் ஆனால் 'முத்துலிங்கம்' மேலும் வற்புறுத்தவே ஒரு நிமிடம் என கூறியவர் 'முத்தை தரு அத்தி திரு நகை' பாடலை முற்றிலும் புதுமையான இனிமையான மெட்டில் பாடி மேலும் இரண்டு மூன்று வகையிலும் பாடி காண்பித்தார்.