Wednesday, April 26, 2006

அரட்டைஅரங்கம் கண்ட வள்ளல் அன்னன் விசு வாழ்க!

தமிழக தேர்தல்-2006 இன்னும் என்ன என்ன படை தாவல்களை சந்திக்க போகிறதோ தெரியவில்லை ஆயினும் அ.தி.மு.க.வில் சமிபத்திய நட்சத்திர இனைப்பான 'விசு' மீது நாம் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.

80'களில் புழுத்து போன கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை comedy காட்சிகள் மற்றும் sentiment் சவடால்களோடு அரங்கேற்றி வெற்றி கண்ட 'விசு' 90'களில் அவ்வேலையை K.S்.ரவிகுமார் மற்றும் V.சேகர் எடுத்து கொண்டதும் SUN TVஇல் போய் அய்க்கியமானார்...அரட்டை அரங்கம் மூலமாக. இ ந் நிகழ்ச்சி தேனீர் கடை மற்றும் முடித்திருத்தகம் போன்ற இடங்களில் நடைபெறும் வெட்டி அரட்டைகளை ஒத்து இருந்தாலும் நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பை பயன்படுத்தி தன்னை ஒரு சமூக காவலராகவும் திக்கற்றோருக்கு திசை காட்டும் அபத்பாந்தனாகவும் உருவகபடுத்தி கொண்டார்.

துன்டை கையில் பிடித்து கொண்டு அவர் அரங்கத்தினோர் சொல்லும் கன்ணீர் கதைகளை கேட்டு அழுது கன்களை துடைத்து கொள்வதும்...மெய்யான சமூக பொறுப்போடு நியாயங்களை பேசும் சிலரை இடக்கரடக்கல் செய்து Off பன்னுவதுமாய் ஒர் தேர்ந்த நடிகராய் தன் அளுமையை வளர்த்து கொன்டு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று கொன்டார்.தமிழ், தமிழர், திராவிடம் மற்றும் தமிழர் வாழ்வுரிமை குறித்த பேச்சுகளை கவனமாக தவிர்த்து Indiaவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதிலும் முன்னிலைபடுத்துவதிலும் வெற்றி கன்டார்.

திரையில் வீர சவடால் அடிக்கும் விஜயகாந்தை போல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க அரைகூவுவதும், முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதும், மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிப்பதும், பொதுவுடமை இயக்கங்களின் செயல் பாடுகளை விமர்சிப்பதும் மற்றும் தான் கொன்டிருக்கும் சாதிய-சமூக விழுமியங்களை கட்டிகாப்பதும் ஆக முழுக்க முழுக்க ஒர் பார்ப்பன திரிபுவாதியாக மக்களை முட்டாள் ஆக்கி கொன்டிருந்தார். SUN TV குழுமம் இவை அனைத்தயும் அரவனைத்தே சென்றது. அவர்களுக்கு கட்சி வேறு கொள்கை வேறு...குடும்பம் மற்றும் சொத்து சேர்த்தல் அதை பாதுகாத்தல் தான் முக்கியம் மக்கள் நலம் எல்லாம் அடுத்த பட்சம். தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ள 'விசு' அவர்களுக்கோர் கருவி. தனது பாசிச கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்க்கு
SUN TV 'விசு'விற்க்கு ஒர் கருவி. இவ்விரு கருவிகளும் சேர்ந்து மக்களை மந்தைகளாக உருவாக்குவதில் பெறும் வெற்றி கன்டனர்.
ஆயிற்று சற்றேரதாழ 25 ஆண்டுகள் தமிழ் மன்னில் பசுவாய் உலா வந்தது இன்று தன் நிஜ முகத்தை காட்டுகிறது...பார்ப்பன பாசிசத்தின் மொத்த உருவமான 'ஜெயா'விடம் சரண் புகுந்ததின் மூலமாக. வேறு இயக்கங்கள் இல்லைய என அய்யபடுவோர்க்கு-BJP இங்கு செல்லாகாசு, RSS-VHP போன்றவை நேரடி அல்லது பெரும் மக்கள் இயக்கங்களாக உருவெடுக்கவில்லை. தேவர் சாதி ஆதிக்கமும் பார்ப்பன தலைமையும் ஒருங்கே அமைந்த...பார்ப்பன-பாசிச லட்சியங்களை மறைமுகமாக செயல் படுத்தி கொன்டிருக்கும் அ.தி.மு.க.வில் இனைத்து கொன்டு தன்னை சரியாகவே அடையாளம் காட்டி இருக்கிறார் 'விசு'. மக்கள் கவணம் கொள்வார்களா அல்லது வழக்கம் போலவே மந்தைகளாக இருப்பார்களா?!!

1 Comments:

Blogger Unknown said...

Another "paarpanar" bashing. What a shame raajasaranam? If you go to our Maestro Raaja, and share your thoughts with him, he will henceforth ask you not to name yourself "raajasaranam"!! He does not accept any religion bashing. Ask yurself why you should call yourself raajasaranam.

5:40 PM  

Post a Comment

<< Home